
நண்பர்களே உங்கள் வீட்டுக்கு கட்டிட வரைபடம் வேண்டும் என்று ஒரு பொறியாளரிடம் கேட்கும்பொழுது நீங்கள் அவருக்கு தெரிவிக்க வேண்டியது உங்கள் மனையின் நீளம், அகலம் திசையுடன், சாலை உள்ள திசை மிக முக்கியம். உங்கள் மனை சரிசதுரம் இல்லாமல் இருப்பின் அதன் இரு மூலைகளுக்கு (குறுக்கு) உள்ள நீளம் முக்கியம்.
அதன் பின் உங்களது தேவைகள் அறைகளின் நீளம், அகலம், என்ன என்ன அறைகள் தேவை பிற்பாடு உங்கள் கட்டிடத்தின் விரிவாக்கம், மேல்தளம் விரிவாக்கம் இவை அனைத்தும் திறந்த மனதுடன் தெரிவித்தல் அவசியம்.
மற்றும் உங்கள் கட்டிடம் சாலை மட்டத்தில் இருந்து எவ்வளவு உயரம்/தாழ்வு நிலையில் இல்லது அதன் அருகே கிணறு, ஆறு, வாய்கால் இருப்பின் அது அமைத்துள்ள இடம் உங்கள் மனைக்கும் அதக்கும் உள்ள தொலைவு, அருகே உள்ள கட்டிடம் அதன் உயரம் இவை அனைத்தும் கருத்தில் கொண்டு இயற்கையில் கிடைக்கும் பஞ்சபூதத்தில் இலவசமாக கட்டிடத்தில் பெரும் வாஸ்து முறையில் அமைக்க வேண்டிய கட்டிட வரைபடம் தயாரிக்க பொறியாளருக்கு மிக எளிது.
மேலும் கட்டிட உரிமையாளர் கட்டிடம் கட்ட ஆகும் செலவை சரியான முறையில் தயார் செய்தது இறுதி முடிவு செய்த கட்டிட வரைபடதிக்கு கணக்கிடு செய்வது இருவருக்கும் மிக நல்லது கால நேரம் விரையம் தவிர்ப்போம்.
No comments:
Post a Comment