Powered By Blogger

Tuesday 28 June 2016

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!


உலகின் முதல் மின்சார சாலை விரைவில் – ஸ்விடன்

                       

   முதன்முறையாக ஸ்விடன் நாட்டில் மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் மின்சார சாலை  போக்குவரத்து அதிகார்வப்பூர்வமாக விரைவில் திறக்கப்பட உள்ளது. ஸ்கேனியா மற்றும் சைமன்ஸ் இணைந்து உலகின் முதல் எலக்ட்ரிக் சாலையை திறக்க உள்ளது.

  வருகின்ற 2030 ஆம் ஆண்டில் புதைபடிவ எரிபொருள் இல்லா நாடாக உருவெடுக்கும் நோக்கில் முதற்கட்டமாக எலக்ட்ரிக் சாலையை அமைத்துள்ளது. இந்த சாலையின் வாயிலாக கனரக வாகனங்கள் டீசல் எரிபொருளை பயன்படுத்தாமல் மின்சாரத்தின் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
  தற்பொழுது சோதனை ஓட்டநிலையில் உள்ள எலக்ட்ரிக் சாலையில் அடுத்த சில ஆண்டுகளில் முழுமையான பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கிலோமீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் சாலையில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமான ஸ்கேனியா நிறுவனத்தின் ஹைபிரிட் டிரக்குகளை கொண்டு செயல்படும்.

Scania G 360 டிரக் நுட்ப விபரம்

மாடல் : Scania G 360 4×2  ( 9 டன் டிரக் )
பவர்டெரியன் : Parallell hybrid, integrated in the gearbox (GRS895)
என்ஜின் : 13-litre, 360 hp (runs on biofuel)
மின்சார மோட்டார் : 130kW, 1050Nm Battery : Li-Ion 5 kWh (gives a driving range up to 3 km when not running on the e-way) System voltage : 700V
 ரயில்கள் தண்டவாளத்தில் இயங்குவதனை போல வடிவமைக்கப்பட்டுள்ள பவர் கிரில் வாயிலாக மின்சார ஆற்றலை பயன்படுத்தி கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சாலையில் ஜி 360 டிரக் பை எரிபொருள் மற்றும் மின்சார மோட்டார் உதவியுடன் செயல்படும். மாசு உமிழ்வு மற்றும் புதைபடிவ எரிபொருள் போன்ற பிரச்சனைகளுக்கு மிக முக்கிய தீர்வாக இந்த திட்டம் அமையலாம்.


Friday 24 June 2016

மைல்கல்... (இன்றைய தகவல்)


சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல... இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம். மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம். இதோ தெரிஞ்சுக்கோங்க...
* மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை
* பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை
* நீலம், வெள்ளை கலர் இருந்தால் மாவட்டசாலை
* பிங்க் அல்லது கருப்பு, வெள்ளை நிறம் இருந்தால் ஊரக சாலை..

Wednesday 22 June 2016

நீரை சுத்தமாக்கும் வாழைப்பழம் !


இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..! ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ…
‘‘சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலை களில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.
ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்” என முடிகிறது ஆய்வறிக்கை.
இனி வாழைப்பழம் வாங்கினால், தோலைத் தூக்கி எறிய வேண்டாம். நீரில் போட்டு வையுங்கள். உலகிலேயே வாழைப் பழ உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்தியாவுக்கு இது இனிப்பான செய்திதானே ? !

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு..எந்த டெக்னாலஜியும் இல்லாம எப்படி கிணறு வெட்டுனாங்க??


அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? . . .

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிடவேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .


சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி ?


நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில்கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள் .


சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?


cow

கிணறு வெட்ட இருக்கும் நிலப்பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .

அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.

Thursday 9 June 2016

உலக பழமை வாய்ந்த கல்லணை(Grand Anicut) அணை பற்றிய தகவல்


சோழ மன்னர்களில் மாவீரனாக போற்றப்படும் கரிகாலன் சோழனால் கட்டப்பட்டது தான் கல்லணை என்பது நாம் யாவரும் அறிந்ததே. அனால் இந்த கல்லணை எதற்காக கட்டப்பட்டது, கட்டும் போது ஏற்பட்ட இடையூறுகள் என்ன? அதை எப்படி சரி செய்தார்கள் என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா? 


கல்லணை, இந்தியாவில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. கல்லணை திருச்சி நகருக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என கூறப்படும் முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி மற்றும் கொள்ளிடம் இங்கு தான் இரண்டாக பிரிந்து செல்கிறது. 


ஏறத்தாழ இது கட்டப்பட்டு 1900 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால், இன்றளவும் சோழர்களின் கட்டிட புகழை தன மீது தாங்கி வான்கண்டு நிற்கிறது கல்லணை. இனி, கல்லணையின் கட்டமைப்பு மற்றும் வரலாறு குறித்து காணலாம்...

இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

உலகின் பழமையான அனை 

தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், உலகில் உள்ள பழமையான அணைகளில் இப்போது வரை புழக்கத்தில் உள்ள அணையும் இதுதான் என்றும் அறியப்படுகிறது.

பழமையான நீர் பாசன திட்டம் 
உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் கொண்டது கல்லணை என்று குறிப்பிடப்படுகிறது.

தொழில்நுட்பம் 
கல்லணையின் அடித்தளம் மணலில் அமைக்கப்பட்டது ஆகும். இந்த பழந்தமிழர் தொழில்நுட்பத்தை இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது.

கல்லனையின் அதிசயம் 
கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும்.

விவசாயிகளின் துயரம் 
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து விவசாயம் பாதிக்கப்படுவதையும், மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான் .
அனைக் கட்டுவது கடினம் 
காவிரியின் மேல் அனைக் கட்டுவது சாதாரன காரியம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள்.

சூத்திரம்
 நாம் கடல் தண்ணீரில் நிற்கும் போது, அலை நமது கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே மணல் அரிப்பு ஏற்பட்டு, நம் கால்கள் மண்ணுக்குள்ளே புதையும். இதைத் தான் சூத்திரமாக மாற்றினார்கள் பழந்தமிழர்கள்.

பெரிய, பெரிய பாறைகள் 
காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டு வந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதையும். அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள். 

கல்லனைக் கட்டப்பட்டது 
நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள். இதனால், இரண்டு பாறைகளும் ஒட்டிக்கொள்ளும். இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

சர் ஆர்தர் காட்டன் 

ஆய்வு இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்துள்ளார்.

மணல் மேடான கல்லனை 
கல்லணை பலகாலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும் வறட்சியாலும் வளமை குறைந்துக் காணப்பட்டது.

மணல் மேடுகளுக்கு தீர்வு 
இந்த சூழலில் 1829-இல் காவிரி பாசன பகுதியின் தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால், சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார். இவர்தான் பயனற்று இருந்த கல்லணையில், தைரியமாக சிறு சிறு பகுதியாய் பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார்.

உலகம் வியந்த கல்லனை 
கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த ஆர்தர் காட்டன், பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறினார்.

மகத்தான அனை 

சர். ஆர்தர் காட்டன், கரிகாலன் கட்டிய இக்கல்லணையை "மகத்தான அணை" (Grand Anicut) என்ற பெயர் சூட்டி அழைத்தார்.

விவசாயத்தைக் காக்கிறது 
பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ள காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணிர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும். அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் (முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்த கிளை ஆறு ) திருப்பி விடப்படும். எனவே டெல்டா மாவட்டத்தின்பல இலட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பற்றப்படுகிறது.

கல்லைனை மேல் பாலம் 
1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.


உலகம் வியந்த பண்டைய தமிழனின் அறிவாற்றல் !

 இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விசயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள்.
 நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும். இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும். அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.
 நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள். இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும். இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.
 ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று.
உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை..!!