Powered By Blogger

Friday 13 May 2016

நீர்க் கசிவைத் தடுக்க

                                               

    கட்டுமானப் பணிகளின்போதே நீர்க்கசிவையும் வெடிப்புகளையும் தடுக்க இப்போது புதிய வழிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. அதாவது கான்கிரீட்டுடன் இந்தக் கலவையைச் சேர்க்கும்போது அந்தக் கலவைக்குள் நீர் புகாமல் தடுக்க முடியும். இந்தக் கலவையின் பெயர் பெனிட்ரான் அட்மிக்ஸ் (Penetron Admix).
   பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைக் கான்கிரீட்டுடன் கலப்பதில் எந்த விகிதத்தைக் கடைப்பிடிப்பது என்று கேள்வி எழும். 100 சதவீத கான்கிரீட்டின் சிமெண்ட் தன்மைக்கு 0.8 சதவீதம் கலந்தால் போதுமானது. தண்ணீர்க் கசிவுத் தடுப்புக்காகப் பிரத்யேகமாக எதுவும் செய்யத் தேவையில்லை. ஏற்கனவே இடப்பட்ட கான்கிரீட்டுகளின் மீதும் பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைப் பயன்படுத்தலாம். ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவைகளிலும் இதைச் சேர்க்கலாம். மேலும் இது மிகச் சிக்கனமான முறை.
       பெனிட்ரான் அட்மிக்ஸ் பல சோதனைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தண்ணீர்த் தொட்டிகளில் இந்தக் கலவையைப் பயன்படுத்தி பலன் அடைந்திருக்கிறார்கள். இந்தக் கலவையைப் பயன்படுத்திய பிறகு நீர்க் கசிவு குறைந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
  மேலும் இந்தக் கலவை கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களிலும் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. துறைமுகங்கள், கப்பல் கட்டும் தளங்கள் போன்ற இடங்களில் கட்டுமானங்கள் எல்லாம் நீருக்குள் மூழ்கிக் கிடக்கும். அதனால் கட்டுமானக் கம்பிகளுக்குள் நீர் புகுந்து கம்பிகளை அரித்து விடும். அதனால் கட்டுமானம் மிக எளிதில் சேதமடைந்துவிடும். பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைப் பயன்படுத்துவதன் மூலம் இதைத் தடுக்க முடியும்.

                         

No comments:

Post a Comment