Powered By Blogger

Monday 16 May 2016

கட்டுமான விரிசலை சீரமைக்கும் புதிய முறைகள்







ட்டுமானங்களின் வலிமையை அசைத்து பார்க்கும் அசாத்திய தன்மை கொண்டவை விரிசல்கள். கட்டுமானத்தின் அடிப்பகுதியிலும் ஏற்படும் விரிசல் ஒட்டுமொத்த கட்டுமானத்தின் உறுதி தன்மையையும் கேள்விக்   குறியாக்கி விடும். 


குடியிருப்புகளின் அருகில் இருக்கும் மரங்கள், குளங்கள், ஈரத்தன்மையான நிலப்பரப்புகள் போன்றவை விரிசலை அதிகப்படுத்துவதில் பங்கெடுத்துக்கொள்கின்றன.  கட்டுமானத்துறையை நவீன தொழில்நுட்பங்கள் வளப்படுத்தி வருவதை தொடர்ந்து விரிசல்களை சரிசெய்யும் முறையிலும் புதுமைகள் புகுந்திருக்கின்றன. பொதுவாக விரிசல்கள் வீட்டின் தாங்கு திறனை உருகுலைக்க கூடியவை. சுவர்களையும், அஸ்திவாரங்களையும் பாதிப்படைய செய்யும் விரிசல்களை வால் ஜாக்கிங், ஹட்ராலிக் பம்பிங் போன்ற முறைகளில் சரிசெய்ய முடியும். 

வால் ஜாக்கிங் (கலவை முறை)



வால் ஜாக்கிங் என்பது விரிசல்கள் விழுந்த இடைவெளிகளில் பிரத்தியேக கலவைகளை நிரப்பு இயந்திரங்கள் மூலம் செலுத்தி விரிசல்களை சரிசெய்வதாகும். இந்த முறையில் மணல், சிமெண்ட் மற்றும் சுண்ணாம்பு சாந்தினை பயன்படுத்துகின்றனர். இதனை கொண்டு விரிசல் இடைவெளிகளை நிரப்புவதால் கட்டுமானம் வலுப்படுத்தப்படுகிறது. 



இது நிரந்தரமான முறை என்பதால் இதனை குறிப்பிட்ட கால இடைவெளிகளுக்கு பின்னர் மீண்டும் சரிசெய்ய தேவையில்லை. அதிகபடியான  இடங்களில் இந்த தொழில்நுட்பத்தையே அதிகமாக பயன்படுத்துகின்றனர். நீர் தேக்கப்பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்கு இவையே சிறந்த முறை. தனிவீடுகள்,  அடுக்குமாடி குடியிருப்புகள் என எல்லா வகையான வீடுகளுக்கும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். 

ஹட்ராலிக் பம்பிங் (இயந்திர முறை) 



இந்த முறை அஸ்திவார விரிசல்களை சரி செய்ய அதிகமாக பயன்படுத்தப்படும் முறையாகும். இந்த முறையில் கட்டிடத்தின் கீழ் பகுதியில் கம்பிகளை கொண்டு வீட்டின் அஸ்திவார அமைப்புகளை பலப்படுத்துகின்றனர். இதனால் வீட்டில் ஏற்படும் விரிசல்கள் சரிசெய்யப்படுவதுடன் அஸ்திவாரப்பகுதிகள் பூமியில் பதியாமலும் பாதுகாக்கப்படுகிறது. 



இந்த முறையில் விரிசல்களை சரிசெய்ய குறைந்த நேரமே தேவைப்படுவதால் வல்லுநர்கள் இந்த முறையை பரிந்துரைக்கின்றனர். சிலாப்  முறைகளை ஒப்பிடும் போது இந்த முறையில் செலவுகள் குறைகின்றன. 



ஹட்ராலிக் பம்பிங் முறையை எளிமையாக மேற்கொள்ள சில வழிமுறைகள்:– 



* இந்த முறையில் அஸ்திவாரங்களை பலப்படுத்த அஸ்திவார பகுதியில் 3*4 இன்ச் அளவில் சுமார் 10 இன்சுகளுக்கு பள்ளம் தோண்ட வேண்டும். 



* அடிபரப்பில் திடமான பரப்பு கிடைக்கும் வரை தோன்டுவது ஹட்ராலிக் கம்பிகளை வலுவாக தாங்கிக் கொள்ளும். இந்த முறையில் கட்டிடங்களை ஹட்ராலிக் கம்பிகளை கொண்டு வலுப்படுத்துகின்றனர். இதனை கட்டுமானத்தின் தரைப்பகுதியுடன் இணைத்து  விடுகின்றனர். 



* தரைப்பகுதியில் இருந்து தோண்டி எடுக்கப்படும் மணல் பரப்பிற்கு மாற்றாக புதிய மணல் நிரப்பப்பட்டு அஸ்திவாரப்பகுதி புனரமைக்கப்படுகிறது. 



* இதில் புஷ் பியர்ஸ் என்ற மற்றொரு செயல்பாடும் உள்ளது. இது கட்டிடத்தினை தாங்க கம்பி சுருள் (ஸ்பிரிங்) வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பொருத்துவதினால் பியர்ஸ் கம்பிகளுக்கு அழுத்தம் செல்லாமல் ஸ்பிரிங் அமைப்புகளே அழுத்ததை பெற்று கொள்கின்றன.



* இதனை பொருத்தும் போது தரைப்பகுதியில் அழுத்தத்தினை தாங்கக்கூடிய இடத்தினை தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் கம்பிகள் வலுவற்ற பகுதியில்  நிறுத்தப்பட்டால் அவை அழுத்தம் அதிகரிக்கும் போது உள்பதியாக வாய்ப்பு உள்ளது.



இதுபோன்ற வழிமுறைகளை பயன்படுத்தி அஸ்திவார விரிசல்களை எளிமையாக சரிசெய்ய முடியும். மேலும் இந்த முறைகளை கட்டுமான நிறுவனங்கள் செய்து தருகின்றன. கட்டுமான நிறுவனங்களின் உதவியின்றி செய்யவிரும்பினால் தரமான ஹட்ராலிக் கம்பிகளை சந்தைகளில் வாங்கி விரிசலை சரி செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment