Powered By Blogger

Saturday 9 April 2016

சிவில் துறையில் சிறந்து விளங்க...
-------------------------------------------------------
மாணவர்கள் மட்டுமல்ல , கல்லூரிகளும் கவனிக்க வேண்டும்
----------------------------------------------------------------------------------------------


    நீங்கள் சிவில் பயிலும் மாணவரா? வகுப்பிலேயே நீங்கள் தான் ஃபர்ஸ்டா? அப்படியானால் கட்டுரைக்குள் வாருங்கள்.வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் சரி. களத்தில் உங்களுக்கு கிடைக்கப் போகும் மதிப்பெண்கள் எத்தனை தெரியுமா? இதென்ன பிரமாதம்? நாங்கள் தான் பிராக்டிகல் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறோமே என நீங்கள் சொல்லலாம்.ஆனால், நிஜமாக நீங்கள் மேற்கொள்ளப் போகும் கட்டுமான புராஜெக்டுகளுக்கும்,வகுப்பில் நீங்கள் மேற்கொண்ட செய்முறைப் பயிற்சிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.இதனால்தான் நிறைய மாணவர்களால் பிரகாசிக்க முடியவில்லை.
     சரி.என்னென்ன அடிப்படையான நுட்பங்களை மாணவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்?அதற்கான வழி என்ன?முதலில்,மாணவர்கள் சைட்டுக்குச் சென்று, கட்டிடங்கள் கட்டுவது எப்படி என்று தங்கள் சொந்த முயற்சியில் தெரிந்து கொள்ள வேண்டும். செமஸ்டர் விடுமுறையில் ஏதோ ஒரு கட்டிடத்திற்குச் சென்று அங்கே நடக்கும் வேலைகளை தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.
பாடமுறைகளுக்கும், ஃபீல்டு ஒர்க்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்திருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல் மற்றும் மணல் குவாரிகள் இருக்கும் இடங்கள், கட்டிடங்களில் பயன்படும் பொருட்களின் தற்போதைய விலைப் பட்டியல், பலதரப்பட்ட தொழில்களின் ஊதியம் போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
    நம்நாடு அல்லாமல் மற்ற நாடுகளில் உள்ள புதிய தொழில் நுட்பங்களைப் பற்றி தெரிந்து கொண்டு நம்நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும்.கட்டிடங்கள் விழாமல் தடுக்க பல விதிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
    இயற்கை பேரழிவான சுனாமி மற்றும் பூகம்பம் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டிய கட்டிடங்களை வடிவமைக்க தெரிந்திருக்க வேண்டும். Soft Computing டெக்னிக்கை பயன்படுத்தி கட்டிடங்கள் வடிவமைப்பை தெரிந்திருக்க வேண்டும். அதனால் கட்டிடங்களில் பொருட்களின் உபயோகங்கள் குறைவதுடன் நேரம் மற்றும் வேலையாட்களின் தேவை குறையும்.
    மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் நேரத்தில் அளவு
மற்றும் முறையை (Auto CAD, ARICI CAD) கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் கல்லூரி படிப்பை முடித்து சைட் ஒர்க்குக்கு செல்லும் போது இது மிகமிக அவசியமாகிறது. மாணவர்கள் படிக்கும் காலத்தில் எந்த மாதிரியான வேலை (அல்லது) மேற்கல்வி படிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
   மாணவர்கள் படிக்கும் பாடங்களுடன் கட்டிடங்கள் கட்டும் விதிமுறைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
    மாணவர்கள் படிக்கும் காலங்களில் டிசைன் சாஃப்ட்வேர் மற்றும் வரைபடம் வரைவதற்கு போன்றவற்றை தெரிந்து கொண்டு இருந்தால் தனியார் துறையிலும் அரசு துறையிலும் முன்னுரிமை தரப்படுகிறது. நூலகத்திற்குச் சென்று தினசரி நாளிதழ்கள், கட்டுமானத்துறை நாளிதழ்களை படித்து நவீன தொழிற்நுட்பங்களை தெரிந்து கொள்ள ேண்டும்.கட்டுமானத்துறை பத்திரிகைகளை தேடிப் பிடித்து வாசிக்க வேண்டும்.
இணையதளத்தில் சிவில் சம்பந்தமான தளத்திற்கு சென்று புதிய புராஜெக்டுகளை பற்றியும், வேலைவாய்ப்புகளைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்அவர்கள் சொந்த முயற்சியில் சிறிய புராஜெக்டுகளை ஒரு செமஸ்டருக்கு ஒன்று வீதம் செய்ய வேண்டும்.
   சிவில் துறையில் முன்னோடியாக திகழும் வல்லுனர்களை பற்றியும் அவர்களது நடைமுறை அனுபவத்தை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.அரசு துறை தேர்வு TNPSC, CPWD, Railway Service Commission, Rites, Highways, UPSC, Staff selection Commission, IAS, IES, IRSஆகிய தேர்வுகளுக்கு அல்லது Gate Examination ஆகியவைகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
   ஆக மொத்தத்தில், மாணவர்கள் சிவில் துறையில் சேர்ந்த நாள் முதல் தங்களை சிவில் இன்ஜினியர்களாக பாவித்துக் கொண்டு அதற்கேற்ப தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நல்ல சிவில் இன்ஜினியராக தங்களை உருவகப்படுத்தி கனவு காண வேண்டும்.
   மாணவர்கள் சிறந்து விளங்க கல்வி நிறுவனங்கள் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களும் நிறைய உள்ளன.
கல்லூரி நிறுவனங்கள் அருகாமையில் உள்ள கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து புராஜெக்டு ஒர்க், மெட்டீரியல் டெஸ்டிங், ஃபீல்டு விசிட் ஏற்பாடு செய்ய வேண்டும்.
    கல்லூரிகளை தொழிற்சாலைகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களுடன் MOU Signசெய்து தொழிற்சாலைகளுக்கு ஏற்ற மாதிரியான பொறியியல் வல்லுனர்கள் தேவை என அறிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
   சிவில் துறையில் முன்னோடியாக திகழும் சிறந்த வல்லுனர்களை கல்லூரிக்கு அழைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
கல்லூரிகளில் Preparation of Estimates, Project Formulation, Investigation & Design execution of works, Testing & Consulting work செய்வதன் மூலம் அரசுத்துறை (National Highways, Highways & Rural Works Board ) உடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு மாணவர்களுக்கு செயல்முறை விளக்கங்கள் புரிந்து கொள்ள வைக்க வேண்டும்.
   ஆராய்ச்சித் துறைகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தி, அதில்மாணவர்கலையும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.மேலும்,நவீன தொழிற்நுட்பங்களை தெரிந்து கொள்ள கூடுதலாக பொறியியல் ஆராய்ச்சி மையங்களை அமைக்க வேண்டும்.
   கல்லூரி நூலகத்தில் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களை (கட்டுமானப் பொறியியல் தொடர்பானவை) வைத்து மாணவர்கள் அதனை பயன்படுத்தி அறிவை புதுப்பிக்க வேண்டும்.
   Manson Training Programme , கருத்தரங்கம் ஆகியவை நடத்துவதன் மூலம் மாணவர்கள் அதில் பங்கு பெற்று பயன்பெறுவார்கள்.
அதுமட்டுமல்ல Consultant, Contractor, Field workers ஆகியோருடைய தொடர்புகளை வைத்துக் கொண்டு இன்னும் கட்டுமானத்துறையில் என்ன சாதிக்க முடியும் என்பதை பற்றியும் மாணவர்களுக்கு பல்வேறுபட்ட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
    மாணவர்கள் மூன்றாவது, நான்காவது ஆண்டு படிக்கும் போது பிற்காலத்தில் வேலைக்கு செல்வதற்கான அவர்களுடைய விருப்பங்களை தெரிந்து கொண்டு (Teachers, IAS, UPSE, Staff Commission, Gate Examinatio) அதற்கு தகுந்தபடி கோச்சிங் கொடுக்க வேண்டும். மாணவர்கள் கிரியேட்டிவிட்டியை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை புதுவிதமான புராஜெக்டுகளை செயற்படுத்த ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பொறுப்பு ஏற்று நல்ல புராஜெக்டுகளை பேட்டண்ட் செய்தவற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
    Material Testing Centre, Consultancy, Coaching Centre, Research Centre ஆகியவற்றை அமைத்துக் கொடுத்து அனைத்துக்கும் தரமான நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்சிவில் மாணவர்களின் வெற்றி என்பது கல்லூரியிலேயே முதலிடம் பெறுவது மட்டுமல்ல என்பதை கல்லூரி நிர்வாகிகளும் சிவில் மாணவர்களும் உணர்ந்திருக்க வேண்டும்

No comments:

Post a Comment